
தீயணைப்பு துறை கட்டிடங்கள் வீடியோ கான்பிரன்ஸ் வழியே முதல்வர் அவர்களால் திறப்பு தீயணைப்பு துறை DGP அவர்கள் கலந்து கொண்டார்
தீயணைப்புத் துறை சார்பில் 15.34 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டில் 2.51 கோடி ரூபாயில் தீயணைப்பு வீரர்களுக்கான 13 குடியிருப்புகள் கடலூர் தூத்துகுடியில் 7.17 கோடி ரூபாயில் இரண்டு மாவட்ட அதிகாரி அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அரவகுறிச்சி ராணிப்பேட்டை ராஜபாளையம் சங்கரன் கோவில் தீயணைப்பு நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று தலைமை செயலகத்தில் வீடியோ கான்பிரன்ஸ் வழியே திறந்து வைத்தார் இந்நிகழ்சியில் உள்துறை செயலர் அமுதா காவலர் வீட்டு வசதி கழகத் தலைவர் விஸ்வநாதன் தீயணைப்பு துறை இயக்குனர் அபாஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
