
தமிழகத்தில் வாகன விபத்தில் 18,704 பேர் உயிரிழப்பு போக்குவரத்து ஆணையர் தகவல்
தமிழகத்தில் 2023- 2024 ல் இதுவரை வாகன விபத்துக்களில் 18 ஆயிரத்து 704 பேர் பலியாகியுள்ளதாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்
வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் ஓராண்டில் 66,841 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.இதில் 17 ஆயிரத்து 261 விபத்துக்களில் 18,704. பேர் உயிரிழந்ள்ளனர். 20,938 விபத்துக்களில் 23,269 பேர் காயமடைந்துள்ளனர். 27,335 விபத்துகளில் 48, 999 பேர் சிறு காயமடைந்துள்ளனர். 1307 விபத்துகளில் உயிரிழப்போ காயமோ இல்லை
மேலும் 66,841 விபத்துகளில் 90 சதவீதமான 64 ஆயிரத்து 841 விபத்துகள் டிரைவர்களின் கவனக் குறைவால் நடந்துள்ளன.46 ஆயிரத்து 734 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததில் 6754 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. விதி மீறிய 6754 வாகனங்களுக்கு 1.36 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது வரியாக 20.72 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது
பள்ளி வாகனங்கள் குறித்து ஆய்வு குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன விரைவில் பள்ளி வாகனங்களுக்கான வழி காட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.
