


மதுரை போக்குவரத்து காவல்துறைக்கு 10 இரு சக்கர வாகனங்கள்
மதுரை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், விபத்து ஏற்படும் இடங்களில் விரைந்து சென்று மீட்பு பணிகள் புரியவும் போக்குவரத்து காவலர்கள் எளிதில் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று அடையும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு புதிதாக 10 இரு சக்கர ரோந்து வாகனங்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜூவால் IPS., அவர்கள் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
விழாவில் மாநகர காவல் ஆணையர் முனைவர்J.லோகநாதன் IPS., கூடுதல் துணை ஆணையர் போக்குவரத்து திரு.திருமலை குமார், உதவி ஆணையர் செல்வின், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பங்கேற்றனர்
