
கடையை சேதப்படுத்திய ரவுடி கைது
மதுரையில் பணம் தர மறுத்ததால் பானி பூரி கடையை சேதப்படுத்திய ரவுடியை போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் வயது (49) இவர் ஆணையூர் ரயில்வே சரக்கு கிட்டங்கி அருகே பானி பூரி கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் ஆனையூர் தமிழ் நகரைச் சேர்ந்த கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி அன்சர் பாஷா வயது (29) சனிக்கிழமை இரவு இவரது கடைக்கு சென்று மது அருந்த பணம் கேட்டாராம். அதற்கு அவர் பணம் தர மறுத்ததால் அவரது கடையை அன்சர் பாட்ஷா அடித்து சேதப்படுத்தி சிவக்குமார் வைத்திருந்த ரூபாய் 1500 ரூபாய் பறித்தார். இதை தடுக்க முயன்றவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.இது குறித்து கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்சர் பாட்ஷாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
