
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
01.04.2024 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குளத்தூர் பகுதியை சேர்ந்த கவின்குமார் (25) என்பவரை தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.சந்திரமோகன் அவர்கள், நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி.சாந்தி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.ஜோதி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 01.04.2024-ம் தேதி திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி கவின்குமார் என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
