
மதுரையில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
மதுரை எஸ் எஸ் காலனி கென்னட் சாலை சந்திப்பில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வந்த மாருதி ஸ்விப்ட் காரை மறித்து சோதனை செய்தனர். அதில் 19 மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வாகன ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது அவர் கே. கே நகரை சேர்ந்த ரிச்சி வயது (25 ) எனவும் கர்நாடகாவில் இருந்து மதிப்பாட்டில்களை வாங்கி வந்து மதுரையில் விற்பனை செய்ய கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து மது பாட்டில்கள் மற்றும் அவற்றை கடத்தி வந்த ரிச்சியை எஸ், எஸ்,காலனி காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ரிச்சியை கைது செய்தனர்.
