
ஆயுதங்களுடன் இருவர் கைது
மதுரையில் போலீசார் நடத்திய ரோந்து பணியின் போது ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் வண்டியூர் சங்கு நகர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.விசாரித்ததில் அவர் வண்டியூர் தீர்த்தகாடை சேர்ந்த மாரிமுத்து எனவும் அவர் மீது கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கே.புதூர் போலீசார் காந்திபுரம் கண்மாய் கரை அருகே வாளுடன் சுற்றித்திரிந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் வயது (23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
