எச்சரிக்கை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் செல்போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? -இனிமேல் அதை செய்ய வேண்டாம்
இந்த சைபர் கிரைம் மோசடிக்கு ஜூஸ் ஜாக்கிங் என பெயரிடப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் ஹோட்டல்களில் நாம் செல்போனை சார்ஜ் செய்யும் போது, வைரஸ்கள் மற்றும் டேட்டாக்களை திருடும் செயலிகள் நமது செல்போனில் மோசடி கும்பல் மூலம் பதிவிறக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன்படி நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் மூலம் வங்கிப் பணத்தையும் மோசடி கும்பல் திருடுவதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு திருடப்பட்ட தகவல்களை வைத்து அப்பாவி மக்களை மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், முடிந்தவரை வீட்டில் வைத்தே செல்போனை சார்ஜ் செய்யும் படியும், செல்போனை முடக்கம் செய்ய முடியாத வகையில் செல்போன் செட்டிங்கை மாற்றிக் கொள்ளவும் கூறி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.