உள்ளாட்சித் தேர்தல்- 63,079 போலீசார் பாதுகாப்பு!
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 63,079 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27- ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30- ஆம் தேதியும் நடக்கிறது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் இடங்களில் நேற்று (26.12.2019) மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (27.12.2019) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் தாலுகா போலீசார் 33,920 பேரும், ஆயுதப்படை போலீசார் 9,959 பேரும், சிறப்பு காவல்படையை சேர்ந்த 4,700 பேரும், போலீஸ் அல்லாத 14,500 பேரும் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்