
பஸ் மோதி வாலிபர் பலி
மதுரை செல்லூர் சிவகாமி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் வயது (29) இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பரான செல்லூர் சூர்ய ராஜபுரம் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் வயது (21) என்பவருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து பஸ் ஓட்டுனரான வினோத் வயது (35) இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற கார்த்திக் வயது (21) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்
