கிராமங்களுக்கு சென்று பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்து, அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வேடசந்தூர் உட்கோட்ட காவல்துறையினர்.
—–‐——-
09.11.2020 திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ் அவர்களின், தலைமையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் பயிற்சி சார்பு ஆய்வாளர் திரு. ரவிசங்கர் ஆகியோர்கள் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களை ஒன்றிணைத்து அவர்களது அனைத்து விதமான புகார் மனுக்களை நேரடியாக பெற்றனர். இதுகுறித்து விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள்.
மேலும் தங்களது கிராமங்களில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் பார்த்துக்கொள்ள கிராமங்களில் CCTV கேமராக்களை பொருத்துவது தொடர்பாகவும், கொரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் முகக்கவசம் அணியும் படியும், பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களுக்குச் செல்லும் பொழுது சமூக இடைவெளியை பின்பற்றி, தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் படியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
