
பனை மரம் ஏறிய தொழிலாளி பலி
மதுரை விரகனூரை சேர்ந்தவர் பொதியன் வயது (34) இவர் பனைமரம் ஏறும் தொழிலாளி நேற்று முன்தினம் சாமநத்தம் அருகே காளாங்கரையில் உள்ள தோட்டத்தில் பனை மரம் ஏறும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி விழுந்து பலியானார். இதில் பலத்த காயம் அடைந்த பொதியன் மீட்கபட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
