
கஞ்சா விற்றவர்கள் கைது
மதுரை பெரியார் பஸ் நிலைய மேம்பாலம் எல்லிஸ் நகர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ். எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தபோது சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 3பேரை பிடித்து விசாரித்தனர்.இதில் அவர்கள் கூடல் நகரை சேர்ந்த ஆனந்தகுமார் வயது( 27)ஆரோக்கியராஜ் வயது (27) இமானுவேல் வயது (27)என்பதும் 2 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த இரண்டு கிலோ கஞ்சா எடை இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
