போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
30.05.2024 திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக் முகமது (எ)அல் ஆஷிக்(31) என்பவரை போக்சோ வழக்கில் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்., இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் படி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சுப்பிரமணியன் அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் திருமதி. நவநீதா
அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி அவர்களின் சீரிய முயற்சியால் இன்று 30.05.2024-ம் தேதி திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி ஆசிக் முகமது (எ)அல் ஆஷிக் என்பவருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
மேலும் இந்தாண்டு இதுவரைக்கும் 26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.