
புளியரை காவல் நிலைய சரகம் வாகன தணிக்கையில் புகையிலை சிக்கியது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு .V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவுப்படி தென்காசி மாவட்டம் முழுவதும் தினமும் கஞ்சா, புகையிலை, விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பேரில் 12.10.2024. ம் தேதி தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நாக ஷங்கர் அவர்களின் மேற்பார்வையில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. கற்பக ராஜா, திரு.சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் SSI, திரு காளிமுத்து, தலைமை காவலர், முகம்மது காலித். திருமலைக்குமார் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர்கள் சகிதம் புளியரை காவல் நிலைய சரகம் மேலப்புதூரில் வாகன தணிக்கை செய்தபோது அவ்வழியாக வந்த குட்டி யானை ஆட்டோவை நிறுத்தி தணிக்கை செய்தபோது அதில் புகையிலை மூட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டோவில் இருந்த இரு நபர்களையும் விசாரித்த போது இருவரும் செங்கோட்டையை சார்ந்த லிங்கராஜ் மற்றும் சுந்தர்ராஜ் எனத் தெரிய வந்தது. இவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
