





மதுரை ஆயிர வைசியர் ஹையர் செகன்ரி ஸ்கூலில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு
மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களின் உத்தரப்படி மதுரை மாநகர் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலிசார் தொடர்ந்து கல்லூரி பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த வகையில் இன்று (25/10/24) மதுரை ஆயிர வைசியர் ஹையர் செகன்ரி ஸ்கூலில் மதுரை, தெற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள ஆயிர வைசியர் ஹையர் செகன்ரி ஸ்கூலில் மாணவர்களுக்கு மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் போதை பொருள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் தலைமை ஆசிரியர் திருமதி விஜயலெட்சுமி அவர்கள் மது விலக்கு பிரிவு தலைமை காவலர் முகமது ஜாபர் கான், முதல்நிலை காவலர் திரு. வெங்கடேஷ்பாபு ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வழங்கினர்.
