Police Department News

தென் மாவட்டங்களில் 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது: தீவிர கண்காணிப்பில் குற்றச் செயல்கள் கட்டுப்பாடு.

தென் மாவட்டங்களில் 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது: தீவிர கண்காணிப்பில் குற்றச் செயல்கள் கட்டுப்பாடு.

தென் மாவட்டங்களில் பாலியல் வழக்கில் சிக்கிய 70 பேர், போதை வழக்கில் தொடர்புடைய 152 பேர், மற்றும் 598 ரவுடிகள் உட்பட மொத்தம் 862 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, மற்றும் தென்காசி பகுதிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும், ஜாதி மோதலால் ஏற்படும் கொலைகளை தடுப்பதற்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டல காவல்துறை தலைவர் உயர்திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா (இ.கா.ப.) அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்வதன் மூலம் குற்றங்களை குறைத்துள்ளதாகவும், 12 ஆண்டுகளில் பாலியல் குற்றங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை தவிர்க்க உடனடியாக குற்றப் பத்திரிக்கை மற்றும் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.