Police Department News

25.10.2021 இன்று காவலர் வீரவணக்க நாள் 2021 முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் போட்டி “TALENTINE-2021” DB JAIN COLLEGE வளாகம் துரைப்பாக்கத்தில் நடைப்பெற்றது.

25.10.2021
இன்று காவலர் வீரவணக்க நாள் 2021 முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் போட்டி “TALENTINE-2021” DB JAIN COLLEGE வளாகம் துரைப்பாக்கத்தில் நடைப்பெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு .சங்கர் ஜிவால் IPS அவர்களின் ஆணையின் பேரில் காவல் இணை ஆணையாளர் தெற்கு மண்டலம் திரு .நரேந்திர நாயர் IPS அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் துணை ஆணையாளர் திரு .மகேந்திரன் IPS அடையார் மாவட்டம் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் திரு .ரவி TPS அவர்களின் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் 2021 முன்னிட்டு பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் போட்டி” TALENTINE-2021″ DB JAIN COLLEGE கல்லூரியில் 25 .10 .2021 தேதி காலை0 9 .00 மணியளவில் காவல் உதவி ஆணையாளர் துரைப்பாக்கம் சரகம் அவர்கள் துவங்கி வைக்கப்பட்டு அதில் St Paul’s School semmanjeri, champions club ,hope Foundation kannagi Nagar ,Sun sports ,Ellen Sharma matric School ,Mehta sports kanainagar boys club ,semmanjeri boys club Jeppaiar School, St pius Perungudi ,sacred heart Sholinganallur ,government school thoraipakkam ,little angels Thuraipakkam ,Ayyappa School some semmanjeri,Bharath Dass school Perungudi ,government school Perungudi ,Jagannath School CSI School ஆகியவற்றை சேர்ந்த 812 மாணவர்கள் 59 ஆசிரியர்கள் மேற்பார்வையில் கலந்து கொண்டனர் உள்அரங்கு போட்டிக்கான கட்டுரைப் போட்டியில் 134 மாணவர்களும் ,ஓவியப் போட்டியில் 162 மாணவர்களும் பேச்சுப் போட்டிகளில் 78 மாணவர்களும் ,பங்கு பெற்றனர். வெளி அரங்கு போட்டிக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 72 மாணவர்களும் ,,400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஐம்பத்தி மூன்று மாணவர்களும், 4400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் 92 மாணவர்களும் ,கைப்பந்து போட்டியில் 90 மாணவர்களும், எறிபந்து போட்டியில் 54 மாணவர்களும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு அறுசுவை மதிய விருந்து வழங்கப்பட்டது. டீ மற்றும் ஸ்னாக்ஸ் இரு வேளைகளும் வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 100 மீட்டர் சூப்பர் சீனியர் இறுதிப்போட்டி மற்றும் 4400 சூப்பர் சீனியர் பெண்கள் தொடர் ஓட்டம் இறுதிப் போட்டிகளை துவக்கி வைத்தார். அதன் பின்னர் DB JAIN கல்லூரி கலையரங்கத்தில் பரிசளிப்பு விழாவானது தமிழ்தாய் வாழ்த்துடன் இனிதாக தொடங்க வரவேற்புரை துரைப்பாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் திரு. ரவி அவர்கள் வழங்கி வரவேற்றார். அதன் பின்னர் அடையாறு மாவட்ட காவல்துறை ஆணையாளர் (பொறுப்பு ) திரு. மகேந்திரன் IPS அவர்கள் மாணவர்களுக்கான அறிவுரையை சிறப்புரையாக வழங்கினார். அதன் பின்னர் விழாவின் சிறப்பு விருந்தினரான சினிமா புகழ் திரு. ரோபோ ஷங்கர் மற்றும் அவரது குழுவினர் மாணவர்களை கவரும் விதமாக நகைச்சுவை உணர்வோடு நிகழ்ச்சி வழங்கி மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் காவல் அதிகாரிகள் உட்பட அனைவரையும் சிரிப்பு கடலில் தள்ளினார்கள். அதன் பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார். அப்போது மாணவர் கூட்டத்தில் காவலர் சீருடை அணிந்திருந்த திவாகர் என்ற சிறுவனை மேடைக்கு அழைத்து அங்குள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அச்சிறுவனுக்கு பூங்கொத்தும் பதக்கமும் தனது கரங்களால் வழங்கி பாராட்டினார். மேலும் மாணவர்கள் எந்த ஒரு செயலையும் திட்டமிடுதலோடும் , விடாமுயற்சியோடும் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கான எண்ணத்தோடும் செயல்பட்டால் வாழ்க்கையில் உயரலாம் என அறிவுரை வழங்கி தனது சிறப்புரையை நிறைவு செய்தார். அதன் பின்னர் தேசிய கீதத்துடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published.