இரு தரப்பினர்க்கு இடையே மோதல்
போலீஸ் துப்பாக்கிச்சுடு…
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு செங்குளம் கிராமத்திலிருந்து ஒரு பிரிவினர் வாகனம் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின் ஊர் திரும்பிய அவர்கள் சென்ற வாகனம் மீது மற்றொரு பிரிவினர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து இரண்டு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்தில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரும் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் அவர்களை கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேரில் வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் அங்கு காவல்துறையினர் மற்றும் கண்ணீர் புகை குண்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.