
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய மூவர் கைது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வல்லம் சவாரிக்கு வந்த ஆட்டோவை வழிமறித்து ஆட்டோ கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கி மிரட்டிய மூன்று பேர் கைது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வல்லத்தில் 4,03.2025. ம் தேதி இரவு தென்காசியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றி வல்லத்திற்கு சவாரி வந்தார் அவர் ஆட்களை இறக்கிவிட்டு திரும்ப தென்காசிக்கு போகும் வழியில் வல்லம் ரோட்டில் வைத்து நான்கு பேர் சேர்ந்து ஆட்டோவை வழிமறித்து ஆட்டோ கண்ணாடியை உடைத்தும் டிரைவரை தாக்கியும் சென்றதாக வந்த புகாரினைப் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் சம்பவத்தில் ஈடுபட்டது வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி மாடன் மகன் விக்னேஷ் மற்றும் அதே தெருவை சேர்ந்த குமார் மகன் சதீஷ், கனித்துரை மகன் மனோஜ், மகேஷ் மகன் மதன் என்பது தெரியவந்தது. அவர்களில் மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாகி உள்ள மதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
