

மதுரை திருப்பாலை பகுதியில் திருடுபோன 2 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் மீட்பு திருப்பாலை போலீசாரில் துரித நடவடிக்கை
மதுரை, திருப்பாலை, கண்ணபிரான் நகர், பிளாட் நம்பர் 6 ல் வசித்து வருபவர் நாராயணன் மகன் சீனிவாச ராகவன்
இவர் திண்டுக்கல், தாடிக்கொம்பு பேரூராட்சியில் EO வாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த 12/01/25 வெளியூர் சென்றவர் 30/01/25 இரவு வீடுதிரும்பினார் அப்போது வீட்டின் முன் பக்க கதவு மற்றும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டுஇருந்தது பீரோவில் இருந்த நகை வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கம் காணவில்லை இதனை தொடர்ந்து அருகில் உள்ள திருப்பாலை காவல் நிலையத்தில் காணாமல் போன நகை பணம் ஆகியவற்றை மீட்டுத்தரும்படி புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி அனுராதா அவர்கள் உடனே வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினார்
விசாரணையில் நகையை திருடியவர்கள்
பாண்டியன் மகன் கோடீஸ்வர முத்து வயது 35,
முத்து மகன் நந்தகோபால் வயது 25,
கணேசன் மகன் மதுபாலன் வயது 25, என தெரியவந்தது
இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து
அவர்களிடமிருந்து 3, 1/2 பவுன் தங்க நகை மற்றும் 65 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டது
நகை திருட்டு போன இரண்டு மாதத்திற்குள்ளாகவே குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, கைது செய்து அவர்களிடம் இருந்து நகை ரொக்கம் கைப்பற்றப்பட்டது
