
இன்உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்
மும்பை துறைமுக வளாகத்தில் 1944 ஆம் ஆண்டு சரக்கு கப்பல் தீ விபத்துக்குள்ளானது அதிலிருந்த வெடிபொருள்கள் வெடித்து சிதறியதில் 71 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர் இதன் நினைவாக 1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக இந்திய முழுவதும் அனுசரிக்கப்பட்டு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக நேற்று ( 14.04.25) அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நீத்தார் நினைவு நாள் தீ தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டது அனுப்பானடி தீயணைப்பு பணியாளர்கள், நிலையத்தில் தீ விபத்து மற்றும் மீட்பு பணியில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி வீரவணக்கம் செலுத்தினார்கள் மற்றும் மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் அவர்களின் உத்தரவுபடி தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடம், கல்லூரிகள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களில் தீ பாதுகாப்பு பிரச்சாரம் தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெறும் என்பதை அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலர் ரா. அசோக்குமார் அவர்கள் தெரிவித்தார்.
