
30 ஆண்டுகள் தலை மறைவாக இருந்த தீவிரவாதிகள் AI தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்தனர்
1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி தீவிரவாத செயல் புரிந்து தலை மறைவாக இருந்து வந்த நாகூர் அபூபக்கர் சித்திக், மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோரை தீவிரவாத தடுப்பு தனிப் படையினர் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்தனர்.
1995 ல் சென்னை சித்தாரி பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு நாகூர் தங்கம் முத்துகிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கு
1999 ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உள்பட ஏழு இடங்களில் ( சென்னை திருச்சி கோவை கேரளா ) குண்டு வைத்த வழக்கு
2011 ல் மதுரை திருமங்கலத்தில் அத்வானி ரத யாத்திரையின் போது பைப்பு வெடிகுண்டு வைத்த வழக்கு
2012 ல் வேலூர் மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013 ல் பெங்களூர் பிஜேபி அலுவலகம் முன் குண்டு வெடித்த வழக்குகளில் பங்காற்றிய அபூபக்கர் சித்திக் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதி தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத தடுப்பு தனிப்படையினரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்
அவரோடு 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 1999 ல் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கின் குற்றவாளி திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
01/07/25 அன்று இவர்களை சென்னை நீதிமன்ற பிறப்பித்த பிடியாணையின்படி தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு படையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
தமிழக அரசால் கடந்த 2023ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட தீவிரவாத தடுப்புப் படை கோவை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவின் உதவியுடன் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது
இந்த 3 முக்கிய நபர்களின் கைது நடவடிக்கையில் 3 மாநில போலீசார் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், “கடந்த 2023ஆம் ஆண்டில் தீவிரவாத தடுப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக, நுண்ணறிவுப் பிரிவின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்புப் பிரிவு (Anti Terrorism Squad), கடந்த 30 ஆண்டுகளாக தமிழக காவல்துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநில காவல் துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த 3 பேரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
‘உள்நாட்டுப் பாதுகாப்பில் இந்திய அளவில் தமிழக காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். கைது நடவடிக்கைக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில காவல்துறைக்கு நன்றி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதற்கு தீவிரவாதத் தடுப்புப் படைக்குப் பாராட்டு தெரிவித்தார்.
“தீவிரவாத தடுப்புப் பிரிவு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 40 வழக்குகளைத் தீர்க்க ஆபரேஷன் அறம் மற்றும் அகலி என்ற இரு ஆபரேஷன்களை மேற்கொண்டு வருகிறது என்றார்.
இந்தப் பிரிவின் உறுதிப்பாட்டைப பாராட்டிய சங்கர் ஜிவால் தமிழ்நாடு விரைவில் தீவிரவாத நடவடிக்கைகளில் இருந்து விடுபடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
