காவல்துறையினருக்கு தடுப்பூசி முகாம் திரு.ரவிசந்திரன் அடையாறு போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் நடைப்பெற்றது.
அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீஸாருக்கு தடுப்பூசி முகாமை தெற்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் தீபா சத்யக் மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் திரு.ஜோசப் அவர்கள் கலந்துகொண்டு மற்றும் சாஸ்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.அசோக்குமார் அவர்களும் இணைந்து 20 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது மற்றும் காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது.ரத்த பரிசோதனை மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளபட்டது .தெற்குப் மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் தீபா சத்யக் அவர்கள் போலீஸாருக்கு முககவசம் ,சானிடைசர் ,கையுறைகள், சோப்பு , ஊட்டச்சத்து உணவு மற்றும் வெயிலில் தாகத்தை தணிக்க மோர் போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.