Police Department News

மதுரை சிம்மக்கல் மற்றும் தெப்பகுளம் பகுதியில் போதை பொருட்களுக்கு எதிராக மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை சிம்மக்கல் மற்றும் தெப்பகுளம் பகுதியில் போதை பொருட்களுக்கு எதிராக மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சிம்மக்கல் பகுதியில் உள்ள, ஸ்ரீ சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், தெப்பக்குளம் பகுதியில் உள்ள, குகன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும் Anti Drug Club மன்றத்தின் போதைப்பொருள்கள் தடுப்பு தொடர்பான 208-வது மற்றும் 209-வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.