
திருச்சியை சேர்ந்த நபர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தவறவிட்ட. ரூபாய் 10,5000 மதிப்புள்ள பொருட்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர்
திருச்சியை சேர்ந்த மணி என்பவரது மகன் ராஜ்குமார் இவர் கடந்த 29/08/25 அன்று காலை 7.50 மணியளவில் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20691 பொது பெட்டியில் பயணம் செய்தார் இவர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தனது பையை மறதியாக விட்டு சென்று விட்டார் பிறகு அதை உணர்ந்த பயணி
உடனடியாக பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர், திரு. பாலசுப்பிரமணி, தலைமை காவலர், திண்டுக்கல்-க்கு தகவல் தெரிவித்தார். உடனே இந்த விஷயம் மதுரை இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, அந்த இரயில் மதுரை வந்ததும் மதுரையில் பணியில் இருந்த துனை உதவி ஆய்வாளர் திருமதி. ச. பாப்பு மற்றும் திரு சிவசங்கர நாராயணன், தலைமைக்காவலர் , இரயில்வே பாதுகாப்பு படை மதுரை மற்றும் விருதுநகர் இரயில்வே பாதுகாப்பு படையினர் திரு.மகாராஜன் மற்றும் காவலர் திரு.சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று அந்த பயணி விட்டுச்சென்ற பையை இரயிலில் தேடி கண்டுபிடித்து அதை மதுரை RPF நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கிடையில், பையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு மதுரை RPF நிலையத்திற்கு பையின் உரிமையாளர் வந்தார். அவரின் முன்னிலையில் அந்த பையில் உள்ளதை சரிபார்த்த போது அதில் சுமார் ரூ. 9,000,00/- (9 இலட்சம் ) மதிப்புள்ள 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 100000/- (1இலட்சம்) மதிப்புள்ள 01 லேப் டாப் மற்றும் ரூ. 5000/- மதிப்புள்ள சார்ஜர் இருந்தது. மொத்தம் ரூ. 10,05,000/- (10 இலட்சத்தி 5 ஆயிரம்) மதிப்புள்ள பணம் பொருட்கள் அனைத்தும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்களது வழக்கமான பணிகளுக்கு இடையே இந்த மாதிரியான பயணிகளுக்கு உண்டான உதவிகளை ரயில்வே பாதுகாப்பு படை மதுரை கோட்ட ஆணையாளர் திரு.சஞ்சய்யா மற்றும் உதவி பாதுகாப்பு ஆணையாளர் திரு.சிவதாஸ் மற்றும் மதுரை ஆய்வாளர் திரு. அஜித் குமார் அவர்களின் உத்தரவின் பெயரில் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
