
காவல் கரங்கள் அமைப்பு மூலம் மீட்கப்பட்ட நபர் சிகிச்சைக்குப்பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
30.08.25 அன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 32 வயதுடைய ஆண் பராரியாக சுற்றித் திரிவதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உடனடியாக மதுரை மாநகர காவல் கரங்களைச் சேர்ந்த காவலர்கள் மூலமாக மேற்படி நபரை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து குடும்பத்துடன் சேர்த்து வைக்க குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளருக்கு உத்தரவிட்டதின் பேரில் மேற்படி நபரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து மீட்டெடுத்து உறவுகள் அமைப்பு மூலம் மதுரை புல்லுத்து பகுதியில் உள்ள அக்க்ஷயா டிரஸ்டில் சிகிச்சை அளித்து ஒரு வாரத்திற்குப் பின்பு பாதிக்கப்பட்ட நபர் அவருடைய விலாசத்தை தெரிவிக்க சோழவந்தானில் உள்ள அவருடைய சகோதரியின் குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டது. இதற்கு பெரிதும் உதவியாக இருந்த நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஹரி அவர்களையும் காவல் கரங்கள் அமைப்பை சேர்ந்த காவலர்களையும் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
