
பணியில் இருந்த போது மரணம் அடைந்த தலைமை காவலருக்கு காப்பீட்டுத் தொகை ஒரு கோடியை முன் நின்று வழங்கிய மதுரை மாநகர் காவல் ஆணையர்
தமிழ் நாடு காவல்துறையில் கடந்த 2003 ம்ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து மதுரை மாநகரில் பணிபுரிந்து வந்து அயல் பணியாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் காசி விஸ்வநாதன் என்பவர் கடந்த பிப்ரவரி 03 ந்தேதி பணிக்கு செல்லும் போது நாகமலை புதுக்கோட்டை அருகே நடந்த வாகன விபத்தில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு SBI விபத்து நிவாரண உதவி தொகையாக
ரூ.1,00,00,000/- (ஓரு கோடி)க்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்
ஜெ.லோகநாதன் இ.கா.ப.அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை மேலாளர் மற்றும் வங்கி அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
