
மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தமிழ் நாடு காவலர் தினம் கொண்டாட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படியும் தமிழக DGP அவர்களது உத்தரவின் படியும் செப்டம்பர் 6 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களது ஆணைக்கு இணங்க மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் அவர்கள் காவல் நிலைய உறுதிமொழியை மேற் கொண்டு அனைவருக்கும் காவலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
