
நோய் வாய்ப்பட்ட முதியவருக்கு மருத்துவ உதவி வழங்கிய மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர்
மதுரை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த வயது முதிர்ந்த பயணி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மதுரை ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை துணை உதவி ஆய்வாளர் R. பாலசுப்பிரமணியன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் செந்தில் அவர்கள், நடைமேடை எண் 4ல் நின்று கொண்டிருந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த வயது முதிர்ந்த உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மீட்டு பேட்டரி கார் உதவியுடன் ரயில்வே நிலைய வாசலுக்கு கொண்டு வந்து பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆலங்குளத்தை சேர்ந்த சுப்பையா வயது 78 இவர் திருவனந்தபுரத்திலிருந்து கோவில்பட்டிக்கு செல்லும் ரயிலில் ஏறுவதற்கு பதிலாக திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வழியாக மதுரை வரும் அமிர்தா எக்ஸ்பிரஸில் தெரியாமல் ஏறி விட்டார். அவருடைய உறவினர்கள் விபரம் தெரியாததால் அவர் கையில் வைத்திருந்த பேங்க் பாஸ்புக்கில் பேங்க் பிரான்ச் மேனேஜர் உடைய தொலை பேசி எண்ணுக்கு தகவல் தெரிவித்து அவர் வீட்டில் அவருடைய உறவினர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபரத்தை மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினரால் தெரிவிக்கப்பட்டது.
இந்த மருத்துவ உதவியின் போது உறுதுணையாக மதுரை ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலைய அதிகாரிகள், காவலர்கள், மதுரை ரயில்வே நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் அனைவரும் உடன் இருந்தனர்.
மதுரை ரயில்வே பாதுகாப்புப் படையின் மதுரை கோட்ட பாதுகாப்பு ஆணையர் திரு.செஞ்சய்யா, ரயில்வே பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு உதவி ஆணையர் திரு.சிவதாஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் J.அஜித் குமார், ஆகியோரின் உத்தரவின் பேரில், மதுரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தங்கள் வழக்கமான பணிகளுக்கு மத்தியில் இது போன்ற மக்களுக்கான உதவிகளையும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
