
மதுரை மாநகரை சுற்றி வரும் காவல் விழிப்புணர்வு வாகனம்
மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காவல் விழிப்புணர்வு வாகனத்தை கொடிஅசைத்து துவக்கி வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர்
ஓவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ந்தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நீத்தார் நினைவு “காவலர் வீர வணக்க நாளாக” தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 21 ம் தேதி மதுரை மாநகர ஆயுதப் படையில் நடைபெற்ற விழாவில் மறைந்த காவலர் நினைவு ஸ்தூபியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் மேற்படி காவலர் வீரவணக்க நாளில் மறைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஒரு வாரம் காலத்திற்கு மதுரை மாநகரைச் சுற்றி வலம் வரும் காவல் விழிப்புணர்வு வாகனத்திற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் மலர் தூவி மரியாதை செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
விழாவில் காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.





