Police Department News

ரயிலில் அடையாளம் தெரியாத வாலிபர் அடிபட்டு மரணம்

ரயிலில் அடையாளம் தெரியாத வாலிபர் அடிபட்டு மரணம்

கடந்த 28/10/2025 ஆம் தேதி காலை 11/00 மணிக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் புகை வண்டி எண் 16340 ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கும் மதுரை ரயில் நிலையத்திற்கும் இடையே கிமீ 499/500 – 300 என்ற பசுமலை ரயில்வே கேட்டுக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாள பாதையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் மேற்படி ரயில் வரும்போது தண்டவாளப்பாதையை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போன நபர் மீது நடவடிக்கை எடுக்க திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மதுரை இருப்பு பாதை காவல் நிலைய குற்ற எண் 432/25 u/s 194 BNSS வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைப் பற்றி யார் என்று அடையாளம் காண இயலவில்லை. உடல் முழுவதும் சிதைந்து உள்ளதால் அங்கமற்ற அடையாளம் காண இயல வில்லை. உடைகள்:
1) அவர் ப்ளூ கலர் முழுக்கை சட்டை.
2) ப்ளூ கலர் பேண்ட்
3) அரக்கு கலர் ஜட்டி அதில் NAVEEN என்று எழுதப்பட்டுள்ளது. இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் மதுரை ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.