Police Department News

மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்

மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது அதனை அந்த வழியாக சென்ற மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த பணியாளர் லட்சுமணன் அவர்கள் பார்த்து அதனை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அந்தப் பையில் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் 2000 ரொக்க பணம் மற்றும் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்வதற்கான பயண சீட்டு ஆகியவன இருப்பது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து
ரயில்வே பாதுகாப்பு படை உதவி சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் பையை தவறவிட்ட பயணி குறித்து விசாரணை நடத்தினார் விசாரணையில் பையை தவற விட்ட பயணி மதுரை எஸ் எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவருடைய மனைவி நளினி என்பதும் இவர் ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் ஏற இரண்டாவது பிளாட்பாரத்திற்கு செல்லும் வழியில் நடை மேம்பாலத்தில்
கைப்பையை தவறவிட்டது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து பெண் பயணி தவறவிட்ட கைப்பை மற்றும் அதிலிருந்த செல்போன் ரொக்க பணம் அனைத்தையும் அவரது மகனிடம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர் பெண் பயனியின் கைப்பையை மீட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவு பணியாளருக்கு முதுநிலை மெக்கானிக்கல் இன்ஜினியர் மற்றும் அலுவலர்கள் பாராட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published.