சென்னையில் போலீஸ் அதிகாரிகளைப்போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர், கடந்த 10ம் தேதி சென்னையில் 4 கிலோ தங்க கட்டிகள் வாங்கியுள்ளார். அவரை பிந்தொடர்ந்த மர்மநபர்கள் 4 பேர் டெல்லி போலீஸ் அதிகாரிகளைப் போல் நடித்து நூதன முறையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்திய அதிகாரிக்ள், மத்திய பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த ஈரானிய கொள்ளையர்கள் ஹசன், அபுஹைதர் அலி, சாதிக், ஹைதர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.