Police Department News

நன்னடத்தை விதியை மீறிய இரண்டு நபர்கள் சிறையிலடைப்பு

நன்னடத்தை விதியை மீறிய இரண்டு நபர்கள் சிறையிலடைப்பு.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் சண்முக பிரபு ஆகிய இருவரும் வழக்கு ஒன்றில் பிடிபட்டு அக்டோபர் 14.10.2019 அன்று தேவகோட்டை ஆர்டிஓ கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்டது.

விசாரணை நடத்திய ஆர்டிஓ திரு.சங்கரநாராயணன் இருவரின் உறுதிமொழி சான்றின் படி ஒரு வருடம் நன்னடத்தை வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நன்னடத்தை விதியை மீறி இருவரும் கடந்த 01.01.2020 அன்று காரைக்குடி செக்காலை வாட்டர் டேங்க் அருகில் உள்ள கடையில் தகராறு செய்து பொருட்களை சேதப்படுத்தி கத்தியை ரோட்டில் இழுத்துக் கொண்டே சென்றனர்.

இதுதொடர்பாக காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் இருவரின் மீது u/s-110(e) CRPC, 294(b),427,506(ii) IPC-ன் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் பெற்றனர்.

இது சம்பந்தமாக காரைக்குடி டிஎஸ்பி அருண் அவர்கள் உத்தரவின் பேரில் SI சரவண போஸ் மேற்படி நபர்கள் நன்னடத்தையை மீறியதால் அந்த உத்தரவை ரத்து செய்ய தேவகோட்டை ஆர்டிஓ கோர்ட்டில் மனு அளித்தார். விசாரணை நடத்திய ஆர்டிஓ விதியை மீறி கத்தியுடன் சுற்றித்திரிந்த லட்சுமணன் மற்றும் சண்முக பிரபு ஆகியோருக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றை 11.03.2020 அன்று ரத்து செய்தார். மேலும் அவர்கள் இருவரை 7 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.