Police Department News

திருவேங்கடம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு

திருவேங்கடம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு.

சங்கரன்கோவில் உட்கோட்டம் திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிஞ்சாக்குளத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு காந்தாரி அம்மன் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நான்கு பேர் மரணமடைந்தனர். இந்நிலையில் மரணமடைந்த நான்கு நபர்களுக்கும் நினைவேந்தல் நடத்துவதற்காக அனுமதி கேட்டிருந்த நிலையில், முன்விரோதம் காரணமாக மீண்டும் இரு தரப்பினரிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் இதனால் சட்டஒழுங்கு மற்றும் பொது அமைதியினை பாதிக்கும் என்று சங்கரன்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பால சுந்தரம் அவர்கள் கோட்டாட்சியரிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில் கோட்டாட்சியர் பழனிக்குமார் (பொறுப்பு) அவர்கள் மூன்று நாட்களுக்கு (13.03.2020 – முதல் 15.03.2020) வரை அப்பகுதிக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published.