சட்டவிரோதமாக கள்ள சாராயம் காய்ச்சி வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பாப்பா மடையைச் சேர்ந்த ஜெகஜீவன் என்பவர் சாராயம் காய்ச்சுவதாக போலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சாலைகிராமம் ஆய்வாளர் திருமதி. வசந்தி அவர்களின் தலைமையில் போலீசார் சோதனை செய்ததில் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சிய மேற்படி நபர் மீது u/s.4(1) (a) (g) (A) TNP ACt – ன் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 3 1/2 லிட்டர் காய்ச்சிய சாராயம் மற்றும் 30 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி கொட்டி அழித்தனர்.