கொரோனாவை வென்று தனது காவல் பணிக்கு திரும்பிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு.
சென்னை பெருநகர காவல்துறையில் முதன் முதலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிளனேடு காவல் நிலைய வாகன சுற்று காவல் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ச.அருணாச்சலம் என்பவர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து 18.05.2020-ம் தேதி பணிக்கு திரும்பினார் அவரை பாராட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் பணிக்கு திரும்பும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.அருணாச்சலத்தை் நேரில் சந்தித்து வாழ்த்துகிறார்.