Police Department News

ஜல்லிகட்டு காளையை அடித்து துன்புறுத்திய வாலிபரை தட்டிக் கேட்ட காளையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

ஜல்லிகட்டு காளையை அடித்து துன்புறுத்திய வாலிபரை தட்டிக் கேட்ட காளையின் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

மதுரை, விளாச்சேரி ரோடு, முனியாண்டிபுரம், 3 வது தெருவில் வசிக்கும் பெ. காசிநாதன் மகன் மதுசூதனன் வயது 27/20, அவரது தம்பி பரத் வயது 24/20, இருவரும் சேர்ந்து 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தனர். அதில் ஒரு காளையை தம்பி பரத்தின் நண்பர் அலெக்ஸின் பராமரிப்பில் பழங்காநத்தத்தில் உள்ள தெற்கு தெருவில் வளர்த்து வந்தனர். தம்பி பரத் அடிக்கடி பழங்காநத்தம் சென்று காளையை பார்த்து வருவது வழக்கம். சென்ற மாதம் 31 ந் தேதி மாலை 6 மணியளவில் தம்பி பரத்தின் நண்பர், கருணாகரன் மகன் சிவராமன் போனில் பேசி தம்பி பரத்தின் காளையை கருப்பு(எ) தொத்தனும், பாண்டியும் அடித்து பிரச்சனை செய்வதாகவும், கேட்க போன சிவராமனையும் அடித்ததாகவும் கூறியதால் தமபி பரத்துடன் அணணன் மதுசூதனனும் பழங்காநத்தம், தெற்கு தெரு சென்று இரவு சுமார் 8 மணியளவில் சிவராமனை சந்தித்து விபரம் கேட்டு உடன் முத்துகாமாக்ஷி(எ) வாக்கிடாக்கி, பீர்முகமது, பிரபா, விஷ்ணு, அலெக்ஸ், மூவேந்திரன், முரளி, ஆகியோரிடம் பேசி விட்டு கருப்பு(எ) தொத்தனை பார்க்க மூக்கையா கோனார் வாழைத் தோப்பு அருகிலுள்ள காலியிடத்திற்கு போன போது அங்கிருந்த கருப்பு (எ) தொத்தன், சந்தோஷ்(எ) சக்குடி, அம்மையப்பன், சின்னையா, ரமேஷ்(எ) மிட்டாய் ரமேஷ், மற்றும் சிலர் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய பயங்கரமான ஆயுதங்களான பட்டா கத்தி, அரிவாள் ஆகியவைகளால் தம்பி பரத்தை தாக்கி விட்டு எங்களை யாராவது பிடிக்க வந்தால் உயிரோட போக முடியாது என்று மிரட்டியவாரே திருவள்ளுவர் நகர் பக்கம் ஓடி விட்டனர்.

காயம் பட்ட தம்பி பரத்தை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பழங்காநத்தம் நித்திலா மருத்துவ மனை கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று பின்பு மதுரை, அரசு ராசாசி புதிய மருத்துவ மனை டிரையேஜ் வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். தம்பி பேச முடியாமல் மயக்க நிலையில் இருந்ததால் உடனிருந்த தனது நண்பர் ஜெயராமனிடம் சொல்ல, சொல்ல எழுதி கொடுத்த வாக்கு மூலத்தின் பேரில் மதுரை சுப்பிரமணியபுரம், C.2. காவல் நிலையத்தில் , அண்ணன் மதுசூதனன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கலைவாணி அவர்களின் உத்தரவின் படி சார்பு ஆய்வாளர் தம்புராஜ் அவர்கள் இந்திய தண்டனை சட்டம் 147, 148, 341, 307, 506/2, ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்

போலீஸ் இ நியூஸ்
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.