மதுரை மாவட்ட காவல் துறையினரை கொரோனாவிலிருந்து பாதுகாக்க, தினசரி காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவு கண்டறிந்து பதிவு செய்ய காவல் ஆய்வாளர்களுக்கு, மதுரை காவல் ஆணையர் உத்தரவு
மதுரை, காவல் துறையினரை, கொரோனாவிலிருந்து பாதுகாக்க, காய்ச்சல் , ஆக்ஸிஜன் அளவு, தினமும் கண்டறிய வேண்டும், என அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, பிற பாதிப்புள்ள 57 வயதுக்கு மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள், காவலர்களை, பாதுகாக்கும் நோக்கில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஓய்வுவளிக்கும் திட்டத்தை புதிய காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா கொண்டுவந்துள்ளார்கள்.
இதற்கான பட்டியலில் 100 பேர் இடம் பெற்றுள்ளனர். மருத்துவரின் ஆலோசனைப்படி, இவர்களுக்கு ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலும் எந்த வித வெளிபுற அறிகுறியுமின்றி, சிலரை கொரோனா துரிதமாக பாதிக்கிறது என்ற நிலை இருக்கிறது.
மதுரை நகரில் பணி புரியும் காவல் துறையினருக்கு, காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவை கண்டறிய காவல் ஆய்வாளர்களுக்கு மதுரை காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தெர்மல் ஸ்கேனர், ஆக்ஸிஜன் அளவு அறியும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
காவல் நிலையங்களில், பணியில் உள்ள காவலர்கள் , அந்தந்த காவல் நிலைய எல்லை யில் பணிபுரியும் காவலர்களுக்கு தினமும் காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவு கண்டறிந்து, தேதி, நேரத்துடன் குறிப்பெடுக்க வேண்டும், என அறிவுருத்தப்பட்டுள்ளது.
இதனையொட்டி காவல் ஆய்வாளர்கள் இன்று முதல் காவலர்களுக்கு ஆய்வு செய்கின்றனர். அறிகுறி தென்பட்டால், அவர்களை உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து மதுரை காவல் துறையினரை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது என நகர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை, திடீர் நகர் C 1, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி கீதா லெக்ஷிமி, சுப்ரமணியபுரம் C 2, காவல் நிலைய சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி. கலைவாணி, மற்றும் குற்றப் பிரிவு ஆய்வாளர் திருமதி. பிரியா ஆகியோர் கூறுகையில் எல்லா காவல் நிலைய ஆய்வாளர்களும், அவரவர் காவல் நிலைய காவலர்களுக்கு காய்ச்சல், ஆய்வு செய்கிறோம்.பணியில் இருக்கும் போது பொது மக்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால், அவர்களுக்கு முகக்கவசம் வழங்குவதோடு, காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவு கண்டறிகிறோம், மார்கெட் போன்ற மக்கள் கூடும் பொது இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி