Police Department News

முட்புதரில் வீசப்பட்ட 10 மாத பெண் குழந்தையை மீட்ட காவல்துறையினர்

முட்புதரில் வீசப்பட்ட 10 மாத பெண் குழந்தையை மீட்ட காவல்துறையினர்

திருச்சி மாவட்டம்¸ மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு அருகே உள்ள மருத்துவமனை தெருவில் உள்ள முட்புதரில் கைக் குழந்தை ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு முட்செடிகளுக்கு நடுவே பிறந்து சுமார் 10 மாதங்களான பெண் குழந்தை ஒன்று கிடந்தது. குழந்தையை மீட்ட காவல்துறையினர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்த்தனர். பின்னர் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை நலம் குறித்து குழந்தைகள் நலமருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் குழந்தை திருச்சி சைல்டு லைன் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.