Police Department News

நண்பனின் பிறந்த நாள் மது விருந்தில், பில்டிங் காண்டிராக்டர் கொலை

நண்பனின் பிறந்த நாள் மது விருந்தில், பில்டிங் காண்டிராக்டர் கொலை

மதுரை மாவட்டம், சுப்ரமணியபுரம், C2. காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான டி.பி.கே. மெயின் ரோடு, பைகரா, MGR சிலை பின் பக்கம் உள்ள ஊரணி மேடு, ரயில்வே காம்பவுண்ட் சுவர் அருகில் ஒருவர் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததின் பேரில் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்களின் உத்தரவின்படி காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், அந்த இடம் மது பிரியர்கள்ஒன்று சேர்ந்து மது அருந்தும் இடமாக இருந்ததால் , அவ்வாறு மது அருந்தும் போது ஒருவொருக்கொருவர் வாக்கு வாதம் ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என எதிர்பார்கப்பட்டது, ஆனால் மதுரை, சம்மட்டியபுரம் , பொன்மேனி, மேட்டுத் தெருவை சேர்ந்த P.பாண்டியன்(லேட்),மகன் P.அன்புசெல்வன், வயது 51/20, இவர் காமராஜர் பல்கலை கழகத்தில் துணைப் பதிவாளராக பணி புரிந்து வருகிறார் என்றும் , சம்பவத்தன்று, (16.06.2020) கொலை செய்யப்பட்டவர் இவரது தம்பி P.திராவிடச் செல்வன், என்றும் அவர் முத்துப்பட்டி, மேலபடப்பு தெருவில் அவரது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இவர் பில்டிங் காண்டிராக்டர் தொழில் செய்து வருவதாகவும் , எப்போதாவது மது அருந்தி விட்டு தாமதமாக வீடு வரும் பழக்கம் உள்ளவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று, ஊரணி மேட்டிற்கு பக்கத்தில் சுமார் 11 மணியளவில் இவரது தம்பி P.திராவிடச் செல்வம் கொலையுண்டு கிடப்பதாக தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து உறுதி செய்த பின் காவல் நிலையம் வந்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் திருமதி.கலைவாணி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திருமதி. மலர்விழி அவர்கள் IPC 302 பிரிவின்படி வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணையை துவங்கினார்கள்.

கொலையுண்டவர் எப்போதும் வைத்திருக்கும் இரண்டு சக்கர வாகனம் TH 58- 3565 (Hero Honda Splender plus ), மற்றும் செல்போன் ரியல் மீ என்ற செல் போனையும் (9159239628), காணவில்லை எனவும் தகவல் தெரிவித்து விட்டு, தனது தம்பியை கொலை செய்த நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை , எடுக்க வேண்டி புகார் அளித்துள்ளார். மேற்படி புகாரின், அடிப்படையில், காவல் துறையினர் விசாரணையில், கொலையுண்டவரின் நண்பன் முத்துப்பட்டியை சேர்ந்த போஸ் மகன் பாலமுருகன் வயது 27/2020, இவனுக்கு 15/06/2020 பிறந்த நாள், அன்றைய தினம் கொலையுண்ட திராவிடச் செல்வனும் பாலமுருகனும் காலை முதல் மது அறுந்தி வந்துள்ளனர், அதன் பின்பு பாலமுருகனின் மற்றொரு நண்பன் சமயநல்லூரை சேர்ந்த சூர்யா வயது 17/2020, என்பவனுக்கும் அழைப்பு விடுத்து, அவனும் மது அறுந்தி வந்த போது போதையில் வாய் தகராறு ஏற்பட்டு சூர்யா என்பவன் தன் கைவசம் வைத்திருந்த ஆயூதத்தால் திராவிடச் செல்வத்தை கொலை செய்துள்ளான். அதன் பின்பு திராவிடச் செல்வத்தின் இரு சக்கர வாகனத்தையும், செல் போனையும் எடுத்துக் கொண்டு வத்தலக்குண்டு வந்து அங்கே செல் போனை ஒரு நபரிடம் விற்று பணத்தை பெற்றுக்கொண்டு கொடைக்கானல் சென்று விட்டனர்.

காவல் துறையினர் கொலையுண்டவரின் செல் போனை ஆய்வு செய்ததின் மூலம் குற்றவாளிகளின் இருப்பிடத்தை அறிந்து அவர்களை விரைந்து சென்று கைது செய்து மதுரை அழைத்து வந்து விசாரணை செய்து அதன் பின் அவர்களை சட்டப்படி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.