Police Department News

உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரும் ஆத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் மருத்துவ சிகிச்சைக்கு மனிதநேயத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உட்பட, அவரது ஆலோசனையின் பேரில் மாவட்ட காவல்துறையினர் அனைவரும் ஒருங்கிணைந்து ரூபாய் 2,20,000/- நிதியுதவி.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகன் என்பவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நலம் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மனித நேயத்துடன் அவரது மருத்துவ செலவிற்காக நிதியுதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் அனைவரிடமும் பங்களிப்பு மூலமாக நிதியுதவி பெற்று, தனது பங்களிப்பாக ரூபாய் 16,100/- வழங்கி மொத்தம் 2,20,000/- ரூபாய் ரொக்க பணத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகன் அவரது மனைவி மற்றும் மகளிடம் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கி, அவரது உடல் ஆரோக்கியத்திற்கு செலவிடுமாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.