விருதுநகர் மாவட்டம்:-
கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் திட்டமிட்டு நடந்து முடிந்தகொலை…
எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் தன் தவறைமறைக்க இருக்கின்ற சூழ்நிலலையில் சிறிய துரும்பையும் (தடையத்தை)விட்டுச்செல்வர் என்பதுதான் இயற்கையின் நீதி….
அந்த சூழ்நிலையில் அருப்புக்கோட்டையில் நடந்த கொலை சம்பவம்.
ஆள் அரவமற்ற பிற்பகல் நேரம் 1.00 மணியளவில் அருப்புக்கோட்டை To பந்தல்குடி செல்லும் சாலை சகல விசயத்திற்கும் சரியான இடமென்றே சொல்லமுடியாது அதிகமுட்புதற்நிறைந்தது.
முல்புதற் அருகே சாலையில் குறுக்கும் நெடுக்குமாக இரண்டு,நான்கு சக்கரவாகனமும் சென்று கொண்டே இருக்கும் யாராவது ஒருவர் இருவர் நடந்துசெல்வதை சிலசமயங்களில் பார்கமுடியும்.
அந்த இடத்தில் வாலிபரின் உடல் இரத்தகாயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது துரிதவிசாரணை ஆரம்பமானது.
அருப்புக்கோட்டை காவல் துறை துணைகண்காணிப்பாளர் வெங்கடேசன் விசாரணையை தொடங்க உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நகரின் குற்றபிரிவு காவலர்களான ஏட்டு பாலமுருகன் ஏட்டு ராமமூர்த்தி கணேஷ்பிரபு,சிறப்பு சார்பு ஆய்வாளர்களான சீனிவாசன் மற்றும் ராம்குமார், ஜெயகோபி, ஆகியோர் அடங்கிய டீம் இவர்கள் களத்தில் இறங்கி இரகசிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தனர்.
இரவு விடியலுக்கு முன் அதாவது 24 மணிநேரத்தில் கொலையாளியை கையும் களவுமாக பிடித்தனர்.
மேற்கொண்டு கொலையாளி பெயர் சுரேஷ் வயது 24 கொலையுண்டவரின் பெயர் விக்ணேஷ் 26 என்றும் தகவல் தெரிந்தநிலையில் காவல் துறை விசாரணை ஆரம்பமானது.
கொலைக்கான காரணம் பலகோணங்களில் பார்த்தாலும் நடந்த சம்பவம் கஞ்சா,வெட்டுசீட்டுசூதாட்டம், கபடிவிளையாட்டு, கொடுக்கல்வாங்கல்,இம்மூன்றும் அடங்கும்.
கொலையாளியின் வாகனத்தை கொலையுண்டவர் வைத்து பணம்பெற்றதாகவும்
அந்தபணத்தை திரும்பதருவதாக அழைத்தபோது அங்குநடந்த வாக்குவாதத்தில் முற்றிப்போய் கத்திகுத்துசம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
கொலையில் சந்தேகப்படும்டியாக இறந்துபோன விக்ணேஷ் செல்போனை கைபற்றி ஆய்வு செய்ததில் குறிப்பிட்ட சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர்.
விசாரணையின்போது அதில்தான் கொலையாளி யார் என தெரியவந்து குற்றத்தை தானாக ஒப்புக்கொண்டார்.
விசாரணையின்போது முக்கியமாக சுரேசினுடைய செல்போனில் முக்கியமாகத்தகவல்ஒன்று இருப்பதாகவும் பார்த்துவிட்டு தருகிறேன் என்று விக்ணேஷ் கொலையானவர் கேட்டுபெற்றுள்ளார்.
அதில் என்ன இருந்தது எதைபார்த்தார் தெரியவில்லை உடனே தன் கால்சட்டை பாக்கெட்டில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ் முதுகில் எதிர்பாராதவிதமாக குத்தியுள்ளார்.
நிலைமையை சமாளித்துக்கொண்ட சுரேஷ் விக்ணேசை கீழே தள்ளிவிட்டு கையிலிருந்த கத்தியை பறித்து கழுத்தில் இடதுபக்கம் ஒரு ஆழமானவெட்டு மற்றொருபுறம் இரண்டு குத்தும்விழுந்தது.
இந்த சம்பவத்தில் சம்பவஇடத்திலேயே விக்ணேஷ் உயிர்பிரிந்தது.
நடந்ததை மறைக்க சுரேஷ் தான் அணிந்திருந்த மேல்சட்டையை கழட்டி அருகில்உள்ள பெரியகண்மாய்பகுதியில் வைத்து அலசிவிட்டு கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் முற்புதரில் தூக்கிஎறிந்துவிட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
பின்னர் விசயம் அறிந்த அருப்புக்கோட்டை காவல் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வரும்போது அந்த இடத்தில் கொலையாளி நின்று மக்களோடு மக்களாக நடப்பதை வேடிக்கைபார்த்ததாக கூறியிருந்தார்.
இந்த செயல் கொலையாளியின் புத்திசாலித்தனமா இல்லை அசட்டுத்தனமா என்று கேள்வி கேட்கும்படியாக உள்ளது.
கொலை நடந்த இடத்தை சுற்றிலும் முள்ளும், சேரும், சகதியுமாக இருப்பதால் காவல் துறையினர் அங்குலம் அங்குலமாகதேடியும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம்கிடைக்கவில்லை.
மற்றொருபுறம் கொலையுண்டவரின் உறவினர்கள் கதறியகாட்சிகள் நெஞ்சை பதைக்கவைத்தன சில நொடிகள்.
கொலையாளி சம்மந்தமான அனைத்து கோப்புகளும் இரவு 8.30 மணியளவில் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திலிருந்து தயார்நிலையில் நீதிபதிமுன் நிறுத்துவதற்கு துணைகண்காணிப்பாளர் மேற்பார்வையில் வெளியே அழைத்து வரப்பட்டார்.
நீதிபதிமுன்பு ஆஜர் படுத்தியபின்பு சிறைகாவலுக்கு அனுப்பபடவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
எப்படிதான் கொலைக்கு வியூகம் அமைத்து தப்பிக்கநினைத்தாலும் தடையங்களை தேடிச்சென்றது காவல்துறை.
தடையமற்ற கொலை என்று நினைத்தாலும் அதை புத்திசாதுர்யத்தாலும் வெளிக்கொணர்ந்ததன்விளைவாக தன்நிகற்ற அதிகாரிகள் மற்றும் குற்றபிரிவு காவலர்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதனால் பெரும்பிரச்சினையானது முடிவிற்குவந்தது எனென்றால் கொலையானவர் அட்டவணையில் கீழ்உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பு உட்பிரிவினரை சேர்ந்தவராக இருப்பதால் நிலமைகட்டுக்குள்வந்தது குறிப்பிடத்தக்கது.
Police E News செய்திகளுக்காக மாநிலசெய்தியாளர் VRK.ஜெயராமன்MA,Mphil
அருப்புக்கோட்டை
விருதுநகர்மாவட்டம்.