ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு
ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் மதுரை காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
தற்போது காவல் ஆணையர் உத்தரவின்படி அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் மக்களுக்கு ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் அவரவர் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர், செல்லூர் D2, காவல் நிலைய ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமி அவர்களின் தலைமையில் செல்லூர் பகுதிகளில் ட்ரோன் கேமரா ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி