தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் பிறந்த நாள் விழா
மதுரை தென் மண்டல காவல் துறைத் தலைவர் திரு. S.முருகன் அவர்கள் தென்மண்டலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் காவல் துறையினருக்கு அவர்களது பிறந்த நாள் அன்று விடுமுறை வழங்கவும் பிறந்த நாளுக்கு முன் தினம் அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்குமாறு அறிவித்திருந்தார்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் திரு. முகமது யூசப்கான் அவர்களுக்கு பிறந்த நாள்.09/09/2020 அன்று,ஆகவே முதல் நாள் 08/09/2020 அன்று ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து மடல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
மாநில செய்தியாளர்
M.அருள்ஜோதி
மதுரை மாவட்ட செய்தியாளர்
S.செளகத்அலி