மதுரையில் தொடர் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட நான்கு நபர்கள் கைது, பத்து இரு சக்கர வாகனங்களை செல்லூர் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்
மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து அடிக்கடி திருட்டு போவதாக மதுரை மாநகர்ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களின் உத்தரவின்படியும், குற்றப்பிரிவு துணை ஆணையர் பழனிகுமார், குற்றப்பிரிவு உதவி ஆணையர் வினோஜி ஆகியோரின் அறிவுறையின் பேரிலும் செல்லூர் D2, காவல் நிலைய ஆய்வாளர் கோட்டைச்சாமி அவர்களின் தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் திரு.ஶ்ரீதரன், மற்றும் திரு. மணபாலன், அவர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. குணசேகரன் அவர்கள், திரு. அபிமன்யு, சிறப்பு சார்பு ஆய்வாளர், திரு. கோட்டைமுனியான்டி, தலைமை காவலர, திரு. கருப்பையா, திரு. போஸ், காவலர் திரு. விக்னேஷ், ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து, செல்லூர் பகுதியில் இரு சக்கர வாகனத்திருடர்களை தேடி வந்த நிலையில் கடந்த 10 ம் தேதி செல்லூர்,மேலத்தோப்பு, மற்றும் சிவன் தெருவை சேர்ந்த இளவர்கள் இருவர் மற்றும் உசிலம்பட்டி,கொக்குளம்,பகுதியை சேர்ந்த சிவசாமி மகன் தீபக் வயது 22/2020,
உசிலம்பட்டி, நடுமுதலைகுளம் பகுதியை சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் நவீன்குமார் என்ற காளியான், வயது 24/2020, ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்ததில் , இளவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டு இரு சக்கர வாகனங்களையும், எதிரிகள் தீபக், மற்றும் நவீன்குமார் என்ற காளியான், ஆகியோர்கள் சேர்ந்து மதுரை மாநகர் பகுதிகளில் 8 இரு சக்கர வாகனங்களையும் திருடியது தெரிய வந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் திருட்டுபோன 10 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இளவர்கள் இருவரையும் இளைஞர் நீதிக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மற்ற இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
