மதுரை மாநகர், கீரைத்துறை பகுதியில் கஞ்சா விற்பனை, ஒருவர் கைது, 1.100, கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை மாநகர், கீரைத்துறை,B4, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி அவர்கள் சென்ற 15 ம் தேதி காலையில் நிலைய அலுவலில் இருந்த போது, கீரைத்துறை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சகிதம் ரோந்து செய்து வந்த போது, காலை 10 மணிக்கு மதுரை நகர் கீரைத்துறை, மூலக்கரை, அஞ்சலி மயானம், அருகே கையில் ஒரு கட்டை பையுடன் நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்ததில் அவர் மதுரை டவுன், கீரைத்துறை, மேலத்தோப்பு 3 வது தெரு கதவு எண்.7ல் வசித்து வரும் ரத்தினத்தேவர் மகன்சண்முகவேல் வயது 50/2020,என்பதும் அவரை சோதனை செய்ததில் அவர்
அந்த கட்டைப்பையில் கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது பின்பு அவரை கைது செய்து விசாரணை செய்து அவரிடமிருந்து சுமார் 1.100 கிலோ கிராம் கஞ்சா மற்றும் வாள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கீரைத்துறை
(சட்டம், ஒழுங்கு) காவல் நிலைய குற்ற எண்.1053/2020, U/S 8(c) r/w 20(b)(ii)(B)NDPS Act & 25(−A)Arms Act பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார். இவர் மீது கீரைத்துறை மற்றும் விளக்குத்தூண் காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் உள்ளது.