கொரோனாவால் பாதிக்கப்பட்டு 27 நாட்களுக்குப்பின்
குண்டடம் காவல்நிலைய பணிக்கு திரும்பிய காவல் ஆய்வாளருக்கு
காவலர்கள் மாலை அணிவித்து வரவேற்று மரியாதை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் காவல் நிலைய ஆய்வாளராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு கொரோனா நோய்தொற்று
உறுதியானதைத் தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று பூரணமாக குணமடைந்து இன்று குண்டடம் காவல்நிலைய பணிக்கு வருகை புரிந்தார் ,அப்போது குண்டடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் காவல் ஆய்வாளருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி
அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்,கொரானாகால அனுபவம் பற்றி சக காவலர்களுக்கு ஆய்வாளர் சுரேஷ்குமார் அறிவுரை வழங்கினார்
