மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார்.
காலி பணியிடங்கள்
பாராளுமன்ற மேல்சபையான ராஜ்யசபாவில் எழுத்து பூர்வ கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எல்லைப் பாதுகாப்பு படையில் 28,92 பணியிடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 26,506 இடங்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 23,906 பணியிடங்களும், எஸ்.எஸ்.பி.யில் 18,643 பணியிடங்களும் இந்தோ திபத் படையில் 5,784 பணியிடங்களும், அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 7,328 பணியிடங்களும் காலியாக உள்ளன.
மத்திய போலீஸ் படையில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்கள் அனைத்தும் பணி ஓய்வு, பணி விலகல் மற்றும் இறப்பு காரணமாக காலியாக இருக்கின்றன.
காலி இடங்களில் 60,210 காவலர் பணியிடங்களுக்கும், 2,534 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும், 330 உதவி கமாடெண்ட் பதவிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணயம் மூலமும் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
